மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
7 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
7 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
7 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் குளம் போல கழிவுநீர் தேங்குகிறது.துர்நாற்றத்தால் நடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொடர்பராமரிப்பின்றி குழாய்கள் சேதமடைந்து அடைப்புகள் காரணமாக ரோட்டில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது.கடந்த சில நாட்களாக அக்ரஹாரம் ரோட்டில் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது.இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், பெயரளவில்கழிவுநீரை உறிஞ்சு எடுக்கின்றனர். மீண்டும் அன்று இரவேகுளம் போல தேங்கி விடுகிறது. இப்பிரச்னைக்குநிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago