உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கருப்பட்டி உற்பத்தி குறைவு கிலோ ரூ.320க்கு விற்பனை

கருப்பட்டி உற்பத்தி குறைவு கிலோ ரூ.320க்கு விற்பனை

சாயல்குடி:-ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சீசன் முடிவடைந்ததால் கருப்பட்டி உற்பத்தி குறைவால் விலை உயர்ந்து கிலோ ரூ.320க்கு விற்கப்படுகிறது.சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், காவாகுளம், மேலச்செல்வனுார், கடுகுச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனைமர காடுகளில் அதிகமாக கருப்பட்டிகள் காய்ச்சி வார்த்தெடுக்கப்படுகிறது. சீசனான தை முதல் ஆடி மாதம் வரை பனை மரத்தில் இருந்து பதநீர் கிடைக்கிறது. அதில் இருந்து பெரிய வட்டுகளில் ஊற்றி காய்ச்சப்படும்போது சுவைமிக்க மருத்துவ குணம் வாய்ந்த கருப்பட்டி அச்சாக வார்க்கப்படுகிறது.கருப்பட்டிகளை மொத்தமாக வியாபாரிகளிடம் அன்றைய விலைக்கு தொழிலாளர்கள் விற்கின்றனர். சீசன் இல்லாத நேரங்களிலும் ஸ்டாக் செய்து வைத்து மதுரை, சென்னை, கோவை மற்றும் வெளிநாடுகளுக்கு இங்கிருந்து கருப்பட்டிகள் பனங்கொட்டானில் பேக்கிங் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. சாயல்குடி வியாபாரி அந்தோணி கூறியதாவது:பொதுவாக சீசன் காலங்களில் கருப்பட்டி கிலோ ரூ. 200 முதல் ரூ.240 வரை விற்கப்படும். தற்போது சீசன் முடிந்துவிட்டதால் உற்பத்தி குறைந்து கருப்பட்டி விலை உயர்ந்து கிலோ ரூ.320க்கு விற்கப்படுகிறது. சிலர் சீனி கலந்த போலி கருப்பட்டிகளை கிலோ ரூ.200க்கு விற்கின்றனர். அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ