உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நீர் நிலைகளை துாய்மையாக    வைப்பது உள்ளாட்சிகள் கடமை; உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர் நிலைகளை துாய்மையாக    வைப்பது உள்ளாட்சிகள் கடமை; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : நீர்நிலைகள் துாய்மையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வது உள்ளாட்சி அமைப்பின் நிர்வாக அதிகாரிகளின் கடமை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் சக்கரக்கோட்டை துங்கு அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்த மனு: சக்கரக்கோட்டை கண்மாயில் கழிவுநீர் கலக்கிறது. குப்பை குவிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தடுக்க நடவடிக்கை கோரி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர், கலெக்டர், டி.ஆர்.ஓ.,- ஆர்.டி.ஓ., ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு:மனுதாரர் கோரும் நிவாரணத்திற்கு விதிவிலக்கு அளிக்கும் நிலைப்பாடு எடுக்க முடியாது. எந்த நீர்நிலையும் மாசுபடாமல் இருக்க வேண்டும்.நீர்நிலைகள் துாய்மையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாக அதிகாரிகளின் கடமையாகும். மனு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ