உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசியல் அமைப்புச் சட்டம் அப்பட்டமாக மீறப்படுகிறது முத்தரசன் பேச்சு

அரசியல் அமைப்புச் சட்டம் அப்பட்டமாக மீறப்படுகிறது முத்தரசன் பேச்சு

சாயல்குடி, : -மோடியின் ஆட்சியில் அரசியல் அமைப்பு சட்டம் அப்பட்டமாக மீறப்படுகிறது என்று இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மூக்கையூர் ரோடு சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து நேற்று காலை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மோடியின் ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் அப்பட்டமாக மீறப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.இது தேர்தல் திருவிழா அல்ல. தேர்தல் யுத்தம். எனவே இண்டியா கூட்டணியை ஆதரித்து வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் வேட்பாளரும் பங்கேற்கவில்லை. கூட்டணியை சேர்ந்த அமைச்சர் ராஜகண்ணப்பன், தி.மு.க., மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷாவும் கலந்து கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்