உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிக்கலில் புறக்காவல் நிலையம் திறப்பு

சிக்கலில் புறக்காவல் நிலையம் திறப்பு

சிக்கல் : சிக்கலில் நாள் தோறும் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை தீர்க்கும் நடவடிக்கையாக 24 மணி நேரம் செயல்படும் புறக்காவல் நிலையம் நேற்று மாலை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.சிக்கல் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட எஸ்.பி., சந்தீஸ் தலைமை வகித்தார். கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வரவேற்றார்.கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றும் வகையில் நாள் தோறும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை