உள்ளூர் செய்திகள்

நோயாளிகள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரெகுநாதபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் மகப்பேறு, பொது மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. இதனால் குக்கிராமங்களில் உள்ள மக்கள் அவசர மருத்துவத்திற்கு ரெகுநாதபுரம் வருகின்றனர். மருத்துவமனையின் இருபுறமும் குப்பை கொட்டப்படுகின்றன. அவற்றில் அவ்வப்போது தீ வைப்பதால் அப்பகுதியை சுற்றிலும் புகை சூழ்ந்துள்ளது. மருத்துவமனைக்குள் புகை வருவதால் நோயாளிகள் அவதியடைகின்றனர். மருத்துவமனை அருகே குப்பை கொட்டுவதையும், எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.  –––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ