உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலியோ சொட்டு மருந்து வழங்கல்

போலியோ சொட்டு மருந்து வழங்கல்

தேவிபட்டினம், ஜூன் 29– தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் ஜென்னத் யாஸ்மீன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜுன் குமார் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பத்மா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரப்பெருமாள், சுகாதார ஆய்வாளர் நம்பு சீனிவாசன் பங்கேற்றனர். ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 97 சிறப்பு மையங்களில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி தலைமையில், பேரூராட்சி தலைவர் மவுசூரியா முகாமை துவங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் பங்கேற்றனர். திருப்பாலைக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் முகமது அக்ராம் அலி தலைமையில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. செவிலியர் ஹெப்சிபா, ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ