உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி நகராட்சியில் நிரந்தர கமிஷனர் இல்லாமல் பெயரளவில் திட்டப் பணிகள்

பரமக்குடி நகராட்சியில் நிரந்தர கமிஷனர் இல்லாமல் பெயரளவில் திட்டப் பணிகள்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் நிரந்தர கமிஷனர் இல்லாத நிலையில் திட்ட பணிகள் பெயரளவில் செயல்படுத்தப்படுவதாக கவுன்சிலர்கள், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி 36 வார்டுகளுடன் பெரிய நகராட்சியாக உள்ளது. இங்கு 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தெருக்களில் பேவர் பிளாக் தளம் சீரமைப்பு, புதிய தார் ரோடு அமைத்தல், சிமெண்ட் ரோடு பணிகள் என கடந்த 10 மாதமாக நடக்கிறது. லோக்சபா தேர்தல் காரணமாக பணிகள் தொய்வு ஏற்பட்டது.கடந்த சில நாட்களாக பரமக்குடி, எமனேஸ்வரம் உட்பட முக்கியமான பகுதியில் தார்ரோடுகள் அமைப்பதற்கு ஆயத்த பணிகள் நடக்கிறது. புதுநகர் உள்ளிட்ட வார்டுகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. பல்வேறு இடங்களில் வாறுகால் கல்வெட்டு பாலங்களும் அமைக்கப்படுகின்றன.ரூ. பல கோடியில் பணிகள் நடைபெறும் நிலையில் நகராட்சியில் நிரந்தர கமிஷனர் இல்லாததால் எந்த திட்டப் பணிகள் பெயரளவில் நடக்கிறது. எனவே பரமக்குடி நகராட்சிக்கு உடனடியாக கமிஷனர் நியமனம் செய்ய வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள், மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ