உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் பள்ளியில் மாணவர்கள் தவிப்பு

முதுகுளத்துார் பள்ளியில் மாணவர்கள் தவிப்பு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை, வகுப்பறை வசதிகள் இன்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்​ துாரி, மேலச்சாக்குளம், ஏனாதி, முதுகுளத்துார் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 380க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பழைய கட்டடத்தில் வகுப்பறை நடக்கிறது. மழை பெய்தால் கூரையில் தண்ணீர் ஒழுகுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். போதுமான கழிப்பறை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர். இதுகுறித்து வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் செல்வகுமார் கூறியதாவது, அரசு பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப போதுமான கழிப்பறை வசதி இல்லாமலும் தவிக்கின்றனர்.கழிப்பறைகள் சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளது. சுற்றுச்சுவர் மாரமத்து பணி செய்யப்படாமல் உள்ளது. மழைப்பெய்தால் பள்ளி வளாகத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி மாணவர்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தை அகற்றி விட்டு புதிய வகுப்பறை கட்டவும், தரைத்தளம் சேதமடைந்துள்ள வகுப்பறையில் மாரமத்து பணி செய்யவும், மாணவர்களுக்கு கழிப்பறை வசதி உட்பட சுற்றுச்சுவர் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை