உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ்கனி சொத்து மதிப்பு ரூ.102.54 கோடியானது ஐந்தாண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு

ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ்கனி சொத்து மதிப்பு ரூ.102.54 கோடியானது ஐந்தாண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தி.மு.க., கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரான சிட்டிங் எம்.பி., நவாஸ்கனி சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2019 தேர்தலில் ரூ.36 கோடி 47 லட்சமாக இருந்தது தற்போது ரூ.102 கோடியே 54 லட்சமாக அதிகரித்துள்ளது.நவாஸ்கனி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது பெயர், மனைவி ஹம்சத் பர்வின், மகன்கள் அப்சர், அக்வீல் ஆகியோர் பெயரில் உள்ள சொத்து விபரங்களை தாக்கல் செய்துள்ளார்.நவாஸ்கனி கையிருப்பில் ரூ.12 லட்சத்து 56 ஆயிரத்து 987, மனைவியிடம் ரூ.ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 450 உள்ளது. நவாஸ்கனியிடம் தங்கம் 1646 கிராம், மனைவியிடம் 1510 கிராம், மகன்களிடம் 1446 கிராம் என 575.25 பவுன் நகைகள் உள்ளது.அசையும் சொத்துக்களாக நவாஸ்கனிக்கு ரூ. 8 கோடியே 60 லட்சத்து 83 ஆயிரத்து 451, மனைவிக்கு ரூ.ஒரு கோடியே 48 லட்சத்து 28ஆயிரத்து 915, மகன்கள் பெயரில் ரூ.ஒரு கோடியே 27 லட்சத்து 85ஆயிரம் மதிப்பில் உள்ளது.அசையா சொத்துக்களாக நவாஸ்கனிக்கு ரூ.20 கோடியே 78 லட்சத்து 77ஆயிரத்து 47 மதிப்பிலும், மனைவிக்கு ரூ.ஒரு கோடியே 35 லட்சத்து 78 ஆயிரத்து 885 மதிப்பிலும், மகனுக்கு ரூ.32 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலும் சொத்துக்கள் உள்ளது. நவாஸ்கனிக்கு ரூ.85 கோடியே 11 லட்சத்து98 ஆயிரத்து 86 மதிப்பிலும், மனைவிக்கு ரூ.15 கோடியே 19 லட்சத்து 87 ஆயிரத்து 864 மதிப்பிலும், மகன்களுக்கு ரூ.2 கோடியே 50 ஆயிரம் என ரூ.102 கோடியே 54 லட்சத்து 2450 மதிப்பில் சொத்து மதிப்பு காட்டப்பட்டுள்ளது. 2019 லோக்சபா தேர்தலின் போது நவாஸ்கனி சொத்து மதிப்பு ரூ.36 கோடியே 47 லட்சமாக இருந்தது. தற்போது ரூ.66 கோடியே 7 லட்சமாக அதிகரித்துள்ளது.

கடன்கள்

வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியது ரூ.ஒரு கோடியே 94 லட்சத்து 43 ஆயிரத்து 619 உள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டியது தொகை ரூ.4 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரத்து 203 பாக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ