உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர் சம்பள முறைகேடு

ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர் சம்பள முறைகேடு

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் முறைகேடு செய்வதை கண்டித்து ஊழியர்கள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.ராமேஸ்வரம் நகராட்சியில் தெருக்கள், வீடுகளில் தேங்கும் குப்பையை சேகரிக்க தனியாருக்கு டெண்டர் விட்ட நிலையில் ஒப்பந்த ஊழியர்கள் 132 பேர் பணியில் உள்ளனர்.இதில் குப்பை சேகரிக்கும் துாய்மை பணியாளர்களாக 110 பேருக்கு தினக்கூலி ரூ.479 வழங்குகின்றனர். இதன்படி ஒருவருக்கு மாதம் ரூ.14,370 வழங்க வேண்டும். ஆனால் வைப்பு நிதி பிடித்தம் போக ரூ.10,500 மட்டுமே கையில் வழங்குகின்றனர். மேலும் வைப்பு நிதியை வங்கியில் செலுத்துவதும் இல்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் முறைகேடு செய்வதை கண்டித்தும், மாதம் 5ம் தேதிக்குள் உரிய சம்பளம் வழங்கவும், அதிக மக்கும் குப்பையை சேகரிக்க உத்தரவிடுவதையும், கையுறை வழங்கவும் கோரி நேற்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் துாய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கலையரசன், ராமேஸ்வரம் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சிவா, கருணாகரன், அசோக் ஆகியோர் நகராட்சி தலைவர் நாசர்கான், கமிஷனர் கண்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பள பிரச்னைக்கு தீர்வு காண உறுதியளித்தால் ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை