உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரேஷன் கார்டுதாரர்கள் சுயவிபரம் மார்ச் 31க்குள் பதிவு செய்யலாம்

ரேஷன் கார்டுதாரர்கள் சுயவிபரம் மார்ச் 31க்குள் பதிவு செய்யலாம்

திருவாடானை : ரேஷன் கார்டில் சுயவிபரம் (இகேஒய்சி) மார்ச் 31 க்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டுகள் மூலம் மலிவு விலையில் உணவு பொருட்களை வாங்க வேண்டுமெனில் ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது சுயவிபரம் (இகேஒய்சி) அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாடானை தாலுகா சிவில் சப்ளை அலுவலர்கள் கூறியதாவது:ரேஷன் கார்டுதாரர்கள் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.மேலும் இறந்தவர்களின் பெயர்களை நீக்காமல் இருப்பது, திருமணமான பிறகு பெண்கள் பெயரை புகுந்த வீட்டிலும் சேர்த்துவிட்டு, தாயார் வீட்டிலிருந்து பெயரை நீக்காமல் இருப்பது போன்ற புகார்கள் வந்துள்ளன.உணவுப் பொருட்கள் சரியான மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக சுயவிபரம் (இகேஒய்சி) பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுடைய ஆதார் எண், அலைபேசி எண், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ஆன்லைன் வாயிலாகவோ, அல்லது ரேஷன் கடைகளிலோ சமர்ப்பித்து அப்டேட் செய்து கொள்ளலாம்.திருவாடானை தாலுகாவில் உள்ள 85 ரேஷன் கடைகளில் 39 ஆயிரத்து 650 கார்டுகள் உள்ளன. இதில் இதுவரை 10 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மார்ச் 31 க்குள் ரேஷன் கார்டுதாரர்கள் கால தாமதம் செய்யாமல் பதிவு செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ