வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தொடர்பு எண் தேவை.......
ராமநாதபுரம்:நடுநிலைப் பள்ளிகளில் காலிப்பணியாக உள்ளதலைமை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ராமநாதபுரத்தில் தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில நிறுவன தலைவர் ஜி.கிருஷ்ணன் கூறியதாவது:புதிய அரசாணை எண் 243ன்படி நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில் காலிப்பணியாக உள்ளதலைமை ஆசிரியர் பணியிடத்தை அங்கு பணிபுரியும்பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.5 நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமனம்செய்ய வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோரின் நேர்முகஉதவியாளராக மூத்த நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.பழைய ஒய்வூதிய திட்டத்தைநடைமுறைப்படுத்த வேண்டும். வட்டார வளமைய மேற்பார்வையாளராக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு , ஊக்க ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். இது தொடர்பாகமாநில தொடக்க கல்வி இயக்குனர் நரேஷை நேரில் சந்தித்துகோரிக்கை மனு வழங்கியுள்ளோம் என்றார்.
தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தொடர்பு எண் தேவை.......