| ADDED : ஜூலை 31, 2024 05:10 AM
ராமநாதபுரம் : மாவட்ட விவசாயத்திற்கு உருவாக்கியவைப்பாறு கஞ்சம்பட்டி கால்வாய் திட்டத்தை அரசு உடனடியாகசெயல்படுத்த வேண்டும் என விவசாயிகள்வலியுறுத்தினர்.ராமநாதபுரம் மாவட்ட காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். விவசாயம் செழிக்க உருவாக்கிய வைப்பாறு கஞ்சம்பட்டி கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.கஞ்சம்பட்டி கண்மாய் கரைகளை சீரமைக்க வேண்டும்.விருதுநகர் மாவட்டம் மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து வைப்பாறு வழியாக வரும் பராம்பரிய வழித்தடங்களை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட எல்லையான பம்மனேந்தல் கண்மாய் வரை கால்வாய்களை கண்டறிந்து துார்வார வேண்டும்.வைகை பூர்வீக பாசனப்பகுதியாக விளங்கிய முதுகுளத்துார், கமுதி, கடலாடியில் உள்ள கண்மாய்களுக்கு வைகை ஆற்று நீரில்பெரிய கண்மாய் நிரம்பியயவுடன் உபரிநீரை பரளை கால்வாய்வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.