உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சத்திரக்குடியில் இருந்து கிராமங்களுக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க கோரிக்கை

சத்திரக்குடியில் இருந்து கிராமங்களுக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க கோரிக்கை

பரமக்குடி : -பரமக்குடி அருகே சத்திரக்குடியில் இருந்து கிராம பகுதிகளுக்கு கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆட்டோவில் அதிகளவில் ஆட்களை ஏற்றிச்செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி உள்ளது. ராமநாதபுரம் செல்லும் இருவழிச்சாலையில் சத்திரக்குடி இருப்பதால் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடும் இடமாக உள்ளது.வாரத்தில் திங்கட்கிழமை சந்தை கூடுகிறது. மேலும் மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள் உள்ளன. பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரங்களில் போதுமான பஸ்கள் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.ஆட்டோவில் இரண்டு புறங்களிலும் மற்றும் பின்புறத்தில் அதிகளவில் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் இருவழிச் சாலை உட்பட கிராமப்புற சாலைகளில் பாதுகாப்பற்ற நிலையில் மக்கள் பயணிக்கின்றனர். சத்திரக்குடியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ