உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்வாய் வசதியில்லாததால் வீட்டை சுற்றிலும் கழிவுநீர்

கால்வாய் வசதியில்லாததால் வீட்டை சுற்றிலும் கழிவுநீர்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுார் தேவேந்திரர் நகர் தெற்கு தெருவில் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.மேலக்கொடுமலுார் தேவேந்திரர் நகர் தெற்கு தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். வீடுகளின் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் வசதி முழுவதுமாக இல்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்குகிறது.இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் கொசுத் தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை