உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருங்குளம் அல்கலம் சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா

பெருங்குளம் அல்கலம் சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே பெருங்குளம் அல்கலம் சர்வதேசப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.அல்கலம் கல்வி குழுமத்தின் தலைவர் மவுலானா அப்துல் குத்துாஸ் அஸ்ஹாரி வழிகாட்டுதலில் நடந்த நிகழ்ச்சியில் உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர் சரத்வர்சன்,அல்கலம் கல்விக்குழுமம் நிர்வாகி ஹிஜாமுதீன், தாளாளர் அப்துல் ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் மெஹபூப் நிஷா சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை