உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொலைநோக்கி கருவி மூலம்  நிலாவை ரசித்த மாணவர்கள்

தொலைநோக்கி கருவி மூலம்  நிலாவை ரசித்த மாணவர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அம்மா பூங்காவில் தமிழ்நாடு ஆஸ்ட்ரானமி அறிவியல் சொசைட்டி சார்பில் தொலைநோக்கி கருவி மூலம் ரத்த சிவப்பு நிலாவை மாணவர்கள், மக்கள் பார்த்து ரசித்தனர்.சந்திர கிரகணத்தின் போது சந்திரன் மெதுவாக படிப்படியாக அடர் சிவப்பு நிறமாக மாறும். இது முழு சந்திர கிரகணத்தின் காரணமாக நிகழும். அப்போது வானத்தில் ரத்தம் தோய்ந்த நிறத்தில் நிலவு காணப்படுவதால் இதை 'பிளட் மூன்' என்று அழைக்கின்றனர். இந்த அரிய நிகழ்வு நேற்றிரவு நடந்தது. ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆஸ்ட்ரானமி அறிவியல் சொசைட்டி மற்றும் அறிவியல் பலகை எய்டு இந்தியா சார்பில் பட்டணம்காத்தானில் உள்ள அம்மா பூங்கா வளாகத்தில் மாணவர்கள், பொதுமக்கள் நிலாவை தொலை நோக்கி கருவி மூலம் காணும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் ஆஸ்ட்ரோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொக்கநாதன் ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி