உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வல்லபை ஐயப்பன் கோயிலில் தேர்வுக்கு முன்பு சிறப்பு பூஜை செய்த மாணவர்கள்

வல்லபை ஐயப்பன் கோயிலில் தேர்வுக்கு முன்பு சிறப்பு பூஜை செய்த மாணவர்கள்

ரெகுநாதபுரம்: அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கக்கூடிய 10, பிளஸ் 1, பிளஸ் 2 பள்ளி மாணவர்கள் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நேற்று சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜையில் ஈடுபட்டனர்.ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி மோகன் மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார். அதிக மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ப்ரீத்தா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ