உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடியில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் ஆய்வு

தனுஷ்கோடியில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் ஆய்வு

ராமேஸ்வரம், : -தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.குளிர்கால சீசனுக்கு தனுஷ்கோடி மற்றும் கோதண்ட ராமர் கோயில் அருகில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் ஏராளமான பறவைகள் வந்து இரு மாதங்கள் தங்கிச் செல்லும். இதனை சரணாலயமாக மாற்றிட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் வந்த கலெக்டர் விஷ்ணு சந்திரன் கோதண்டராமர் கோயில், தனுஷ்கோடி சர்ச், முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் நடக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.பின் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகே சங்குமால் கடற்கரையில் உள்ள பூங்காவை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் விதமாக சுகாதாரம் பராமரிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், ராமேஸ்வரம் தாசில்தார்கள் வரதராஜன், அப்துல் ஜபார், நகராட்சி கமிஷனர் கண்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ