உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குற்றவழக்கு வாகனங்கள் ஸ்டேஷனில் வீணாகும் அவலம்

குற்றவழக்கு வாகனங்கள் ஸ்டேஷனில் வீணாகும் அவலம்

திருவாடானை : போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள் மக்கி வீணாகிறது.திருவாடானை சப்-டிவிஷனில் உள்ள திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் குற்றபிரிவு, மதுவிலக்கு மற்றும் விபத்துக்களில் பறிமுதல் செய்யபட்ட டூவீலர்கள் அந்தந்த போலீஸ்ஸ்டேஷன்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கோர்ட் வழக்குகள் முடிந்த பிறகு முறையான ஆவணங்களை காண்பித்து வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எடுத்துச் செல்லவில்லை. இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குவிந்து கிடக்கின்றன. ஒரே இடத்தில் நிறுத்தபட்டு புதைந்து வீணாகி வருகின்றன.நீண்ட நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் பாம்புகள் விஷபூச்சிகள் புகலிடமாக மாறி வருகிறது. ஆண்டு கணக்கில் நிறுத்தப்பட்டதால் மக்கி வீணாகிறது. எனவே இவற்றை ஏலம் விட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை