உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூர் வெயிலுகந்த விநாயகர் செப்., 5ல் திருக்கல்யாணம் கொடியேற்றம் நடந்தது

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் செப்., 5ல் திருக்கல்யாணம் கொடியேற்றம் நடந்தது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில், பிரசித்தி பெற்ற வெயிலுகந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மூலவர் மீது, சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளதால், வெயில் உகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இங்கு, சதுர்த்தி விழா, 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு, சதுர்த்தி விழா, நேற்று காலை, 9:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, மூலவர் மற்றும் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, 6:30 மணிக்கு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். தொடர்ச்சியாக தினமும் மாலையில், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் திருவீதி உலா நடைபெறும். எட்டாம் நாளான செப்.5ல் சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கும். தென் தமிழகத்தில் இக்கோவிலில் மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. செப்.6 ல் தேரோட்டமும், 7ல் தீர்த்தவாரியும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ