உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் 100 டன்  ரேஷன் அரிசியுடன் இரு   லாரிகள் மாயம்

ராமநாதபுரத்தில் 100 டன்  ரேஷன் அரிசியுடன் இரு   லாரிகள் மாயம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் ரேஷன் கடைகளுக்காக ரயிலில் வந்த அரிசி மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லாமல், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 டன் அரிசியுடன் மாயமான இரு லாரிகளை போலீசார் தேடுகின்றனர். ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு 21 பெட்டிகளில் 26 ஆயிரத்து 502 மூட்டைகளில் 1344 டன் அரிசி கொண்டு வரப்பட்டது. லாரிகளில் ஏற்றி எடை போடப்பட்டு, ராமநாதபுரம் நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் பிரித்து அனுப்பப்படும். நேற்று முன்தினம் 55 லாரிகளில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டன. இரவு வரை லாரிகள் எடை போட்டு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக எடை போட முடியாமல் 10 லாரிகளில் அரிசி மூடைகளுடன் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று காலையில் 10 லாரிகளில் 2 லாரிகள் அரிசி லோடுடன் காணாமல் போயின. லாரியில் தலா 500 மூட்டைகளில் 50 டன் எடையுள்ள 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி இருந்தது. குறிப்பிட்ட லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து லாரிகளில் அரிசி ஏற்றும் ஒப்பந்தகாரர் ரவி புகாரில் ராமநாதபுரம் நகர் போலீசார் மாயமான இரு லாரிகளை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி