உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூர் விநாயகர் காளை வாகனத்தில் ஊர்வலம்

உப்பூர் விநாயகர் காளை வாகனத்தில் ஊர்வலம்

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக. 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழாவில் தினமும் மாலையில் வெள்ளி மூசிகம், கேடயம், சிம்மம், மயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.விழாவின் ஆறாம் நாளான நேற்று மாலை ரிஷப (காளை) வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. வீதி உலா வந்த விநாயகரை பெண்கள் தெருக்களில் மாக்கோலமிட்டு வரவேற்றனர். முன்னதாக மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.முக்கிய விழாவான விநாயகர் திருக்கல்யாண விழா இன்று (செப்.5 ) மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. விழாவின் தொடர்ச்சியாக செப்.7ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் இக்கோயில் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை