| ADDED : மே 20, 2024 11:03 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிபட்டணம் ஆயிரவைசிய மஞ்சபுத்துார்மக்களுக்கு பாத்தியமான சவுபாக்கிய நாயகி சமேதஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.இக்கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 12ல்காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கி மே 22 வரைநடக்கிறது. தினசரி சுவாமி, அம்மன் சிறப்பு அபிேஷகம்,அலங்காரத்தில் பூஜைகள், சுவாமி புறப்பாடு நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 18 இரவில்திருக்கல்யாணம் நடந்தது.நேற்றுகாலை சவுபாக்கியநாகி, ஆதிரெத்தினேஸ்வரர் அலங்காரத்தில் தேரேற்றம்செய்யப்பட்டு முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது.அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று (மே 21) காலை 8:00 மணிக்கு தீர்த்த வாரி, மஞ்சள்நீராட்டு நடக்கிறது. நாளை (மே22ல்) வைகாசி விசாகத்தைமுன்னிட்டு சுவாமி, அம்மனுக்கு காலையில் அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை, இரவு 7:00மணிக்கு புஷ்பசப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.