உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் நலத்திட்ட உதவிகள் விழா

கமுதியில் நலத்திட்ட உதவிகள் விழா

கமுதி: கமுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, பகவத்சிங் நினைவு தினம், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் லெட்சுமணன் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் சுரேஷ், மாநில பொதுச் செயலாளர் கர்ணன், தேசிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் சப்பாணி முருகேசன் வழங்கினார்.மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் வைக்கவும், தேவர் ஜெயந்தி விழாவை தேசிய அரசு விடுமுறை தினமாகவும் அறிவிக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !