பரமக்குடியில் 10 நாள் புத்தக திருவிழா நாளை துவக்கம்; போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் உண்டு
பரமக்குடி; பரமக்குடியில் நம்ம ஊரு புத்தகத் திருவிழா நாளை துவங்க உள்ள நிலையில் மாணவர் களுக்கான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் 10 நாட்கள் நடக்கிறது. பரமக்குடி மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 3வது ஆண்டாக 'பரமக்குடி படிக்கிறது,' என்ற தலைப்பில் புத்தகத் திருவிழாவை நடத்துகின்றனர். முதல், 2ம் ஆண்டுகளில் 15 மற்றும் 20 ஸ்டால்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு 30 ஸ்டால்களுடன் 10 நாட்கள் நடக்க உள்ளது. பரமக்குடி பாரதிநகர் ராஜா மஹாலில் நாளை (ஜூலை 25) துவங்கி ஆக.,3 வரை நடக்கிறது. இது தனியார் அமைப் பினரால் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவாகும். மக்கள் நுாலக தலைவர் சந்தியாகு, வரவேற்புழு தலைவர் சேகர், செயலாளர் பசுமலை, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து உள்ளனர். துவக்க விழாவில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பங்கேற் கிறார். 10 நாட்களும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பேச்சரங்கம் நடக்கிறது.