உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாய்கள் கடித்து 13 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 13 ஆடுகள் பலி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தை சேர்ந்த சண்முகவேலுக்கு சொந்தமான 13 ஆடுகளை நாய்கள் கடித்ததில் உயிரிழந்தன.பொக்கனாரேந்தல் கிராமத்தில் சண்முகவேல் ஆடுகள் வளர்த்து வருகிறார். ஆடுகளை கிடை போட்டு அடைத்திருந்த போது 10க்கும் மேற்பட்ட நாய்கள் ஆடுகளை கடித்ததில் 13 ஆடுகள் இறந்தன. அங்கு வந்த தேரிருவேலி கால்நடை டாக்டர் தமிழ்ச்செல்வி ஆடுகளை பரிசோதனை செய்தார்.வி.ஏ.ஓ., ரகுபதி ஆய்வு செய்தார். ஆடுகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் தற்போது உயிரிழந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சண்முகவேல் கோரிக்கை விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை