டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 1314 பேருக்கு அனுமதி
திருவாடானை,: திருவாடானை தாலுகாவில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத 1314 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., உள்ளிட்ட பணியிடங்களுக்காக டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு ஜூலை 12 ல் நடக்கிறது. இத்தேர்வு தாலுகா வாரியாக உள்ள மையங்களில் நடக்கிறது. இது குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறியதாவது:திருவாடானை தாலுகாவில் சின்னக்கீரமங்கலம் பள்ளியில் இரண்டு இடங்களிலும், திருவாடானை அரசு கலைக்கல்லுாரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓரியூர் தனியார் பள்ளி, தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஆறு இடங்களில் தேர்வு நடக்கிறது.தேர்வு எழுத 1314 பேருக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்று (ஜூலை10) திருவாடானை கருவூலத்திற்கு கொண்டு வரப்படும் என்றனர்.