மேலும் செய்திகள்
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
தொண்டி:கடலில் இரண்டு நாட்களாக மிதந்த கஞ்சா மூடை ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் கடற்கரையில் ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே மோர்பண்ணையில் இருந்து மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்கச் சென்றனர். கடலில் 8 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பெரிய சாக்கு மூடைமிதந்ததை பார்த்தனர். அதை மீட்க அச்சமடைந்தவர்கள் மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசார் தேவிபட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம், நம்புதாளை உள்ளிட்ட கடல் பகுதியில் படகில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கஞ்சா கடத்தி சென்ற போது படகிலிருந்து மூடை தவறி விழுந்திருக்கலாம்எனத்தெரிவித்தனர். 18 கிலோ கஞ்சா இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணிக்கு பாசிபட்டினம் கடற்கரையில் ஒரு மூடை ஒதுங்கியது. எஸ்.பி.,பட்டினம் போலீசார் சோதனை செய்த போது அதில் 18 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.17 லட்சம் என தெரிவித்தனர். மேல்விசாரணை நடக்கிறது.
12-Sep-2025