மேலும் செய்திகள்
விபத்தில் ஊழியர் பலி
28-Oct-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எஸ்.எஸ்.ஐ., தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் பஜார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., யாக பணிபுரிபவர் பாபு 55. இவர் நயினார்கோவில் ரோடு இடையர்வலசை சந்திப்பு பகுதியில் போலீஸ்காரர்கள் ராஜபஞ்சம், பார்த்தசாரதி ஆகியோருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் கடை சந்திப்பில் மது போதையில் தகராறு செய்த இருவரை எச்சரித்தனர். அவர்கள் பாபுவை கீழே தள்ளிவிட்டனர். போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்களையும் கீழே தள்ளிவிட்டு கத்தியால் பாபுவை குத்த முயன்றனர்.கத்தியை காட்டி மிரட்டி இருவரும் தப்பி சென்றனர். பாபு புகாரில் சூரங்கோட்டை காலனி பிரசாந்த் 29, குறிஞ்சித்தெரு சலாம் 22, ஆகியோரை பஜார் போலீசார் கைது செய்தனர்.
28-Oct-2024