உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடக்கக்கல்வி  ஆசிரியர்கள் 200 பேர் கைது

தொடக்கக்கல்வி  ஆசிரியர்கள் 200 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக்) சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கு மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாலன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முனியசாமி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி லியோ ஜெரால்டு எமர்சன், தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் மன்றம் துரைமாணிக்கம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.முன்னதாக ரயில்வே பீடர் ரோட்டில் மறியல் செய்ய முயன்ற 200க்கு மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி