நீண்ட வாளுடன் மக்களை அச்சுறுத்திய 3 பேர் கைது
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பஸ் ஸ்டாப்பில் நீண்ட வாளுடன் மக்களை அச்சுறுத்திய 3 பேரை கேணிக்கரை போலீசார்கைது செய்தனர்.கேணிக்கரை எஸ்.ஐ., தங்கஈஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலாந்தரவை பகுதியில் நீண்ட வாளுடன் மக்களை அச்சுறுத்துவதாக தகவலின் படி அங்கு சென்றனர்.அங்கு நீண்ட வாளுடன் இருந்த வாலாந்தரவைபூசைமுத்து மகன் விக்னேஷ்வரன் 24, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜித்குமார் 29, பூசை முத்து மகன் பூமணி 28, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.