உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் 36வது பட்டமளிப்பு விழா

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் 36வது பட்டமளிப்பு விழா

கீழக்கரை : -கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் 36வது பட்டமளிப்பு விழா நடந்தது. முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹபீப் முகம்மது தலைமை வகித்தார். கல்விக் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் நிர்மல் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு கைத்தறி மகளிர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கி பாராட்டி பேசுகையில், வாழ்க்கையில் வெற்றியும் வரும், தோல்வியும் வரும். தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது.விடாமுயற்சியுடன் முயன்று தோல்வியை வென்று சாதனை படைக்க மாணவர்களாய் நீங்கள் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனை செய்ய வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் நமது மனதை ஒருநிலைப்படுத்தவும் நிம்மதியாக இருக்கவும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த செயலை செய்தாலும் ஈடுபாட்டுடன் விருப்பத்துடன் செய்வது பயனளிக்கும் என்றார்.அண்ணா பல்கலை அளவில் தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்த 7 மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு, 292 இளநிலை இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் 50 முதுநிலை இன்ஜினியரிங் பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் செந்தில்குமார், திட்டமிடல் அலுவலர் திராவிட செல்வி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேஸ்வரன், ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் செல்வப்பெருமாள் உட்பட துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி