உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெவ்வேறு விபத்துகளில் பெண் உட்பட 5 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் பெண் உட்பட 5 பேர் சாவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் டூ - வீலர்கள், கார்கள் மோதிய வெவ்வேறு விபத்துகளில், ஐவர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில், அரசடி வண்டல் கிராமத்தை சேர்ந்த ரூபன் ராஜ், 21. இவர், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு ராமநாதபுரம் நோக்கி, டூ - வீலரில் இரு நண்பர்களுடன் வந்தார். தொருவளூர் கிராமத்தை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி முருகன், 45, ஊருக்கு டூ-வீலரில் சென்று கொண்டிருந்தார். நயினார்கோவில் ரோடு, கிருஷ்ணா நகரில் இரு டூ - வீலர்களும் நேருக்கு நேர் மோதியதில் முருகன், ரூபன் ராஜ் உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ரீத்தா மேரி, 50, கன்னியாகுமரி சென்று விட்டு, ஊருக்கு நேற்று முன்தினம் இரவு காரில் திரும்பியபோது, மாடக்கொட்டான் கிராமம் அருகே இவரது கார் மீது, கடம்பூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த கார் மோதியது. இதில், ரீத்தா மேரி உயிரிழந்தார். கமுதி, கழுகுமலையை சேர்ந்த கார்த்திக், 31, நேற்று முன்தினம், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு குடும்பத்துடன் அபிராமம் வந்தார். கார்த்திக் அவரது மாப்பிள்ளை பூமணி, 25, இருவரும், கமுதி சென்று விட்டு, டூ - வீலரில் அபிராமம் திரும்பியபோது, கமுதி கே.நெடுங்குளம் அருகே சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் டூ - வீலர் மோதியது. இதில், இருவரும் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ