மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
04-Jul-2025
ராமேஸ்வரம்: -நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மற்றொரு படகு மீது கப்பலைக்கொண்டு மோதி சேதப்படுத்தினர்.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 456 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம்போல் இந்திய- இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைத்து ராமேஸ்வரம் கரை நோக்கி திரும்பினர். அப்போது ஈசக்பவுல் என்பவரது படகில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் அந்தபடகை மடக்கிப்பிடித்தனர். அதில் இருந்த மீனவர்கள் டூதர் 40, சண்முகம் 56, எடிசன் 48, சக்திவேல் 43, ஜெகதீஷ் 42, டல்வின்ராஜ் 46, அன்பழகன் 50, ஆகிய 7 பேரை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். பின் மீனவர்கள் மீது மீன்வளத்துறையினர் வழக்குப்பதிந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். படகு சேதம்
நேற்றுமுன்தினம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மரியசீரோன் என்பவரது விசைப்படகு நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் வேண்டுமென்றே கப்பலை கொண்டு படகின் பின்பகுதியில் மோதினர். இதில் படகின் மர பலகைகள் உடைந்து சேதமடைந்தது. பின் இலங்கை வீரர்கள் எச்சரித்து விரட்டியதும், படகில் இருந்த 7 மீனவர்கள் நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினர். இப்படகை சரிசெய்ய ரூ. 2 லட்சம் ஆகும் எனத்தெரிவித்தனர். மீனவர் காயம்
ஆம்ஸ்ட்ராங் என்பவரது விசைப்படகில் நேற்று முன்தினம் 6 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்தனர். இதில் ஞானசேகரன் 58, வலது காலில் கயிறு சுற்றி இழுத்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை காப்பாற்ற சக மீனவர்கள் படகை ராமேஸ்வரம் கரைக்கு திருப்பினர். அதன்பின்னர் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
04-Jul-2025