கடலில் நீந்திய மீனவர் பலி
வாலிநோக்கம்: வாலிநோக்கம் அருகே கீழமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரையில் நாட்டுப்படகில் தேங்கிய மழைநீரை அகற்ற நீந்திய போது மீனவர் உயிரிழந்தார். கீழமுந்தல் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் 30. நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் இவரது நாட்டுப்படகில் தண்ணீர் தேங்கியது. பலத்த காற்று வீசியதால் படகில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நாட்டுப்படகிற்குநீந்தி செல்ல திட்டமிட்டிருந்தார்.நேற்று காலை 10:00 மணிக்கு கடற்கரையில் இருந்து 100 மீ., தொலைவில் உள்ள நாட்டுப்படகிற்கு நீந்தி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் மூச்சுத் திணறி கடலுக்குள் மூழ்கிய மீனவர் நாகராஜ் உயிரிழந்தார்.இதுகுறித்து வாலிநோக்கம் மரைன் போலீசார் வழக்கு பதிந்து மீனவரின் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.