உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் கடலில் மிதந்து வந்த மிதவை

தொண்டியில் கடலில் மிதந்து வந்த மிதவை

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம்தொண்டி கடலில் மிதந்து வந்த மிதவையை போலீசார் மீட்டனர்.தொண்டி அருகே நேற்று முன்தினம் மிதவை மிதந்து கொண்டிருந்தது. புதுக்குடியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் அதை பார்த்து மரைன் போலீசுக்கு தெரிவித்தனர். தொண்டி மரைன் போலீசார் நேற்று காலையில் மிதவையை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். போலீசார் கூறுகையில், ஆபத்தான இடங்கள், பாறைகள் நிறைந்த பகுதி, மற்றும் கடல் எல்லையை குறிக்கும் வகையில் மிதவைகளை மிதக்க விடுவது வழக்கம். சில நேரங்களில் கடலில் திசையை அறிந்து கொள்வதற்கான அடையாளமாகவும் மிதவையை பயன்படுத்துவார்கள். சரக்கு கப்பல்கள் போக்குவரத்து அதிகம் உள்ள கடல் பகுதிகளில் மிதவைகளை மிதக்க விட்டிருப்பார்கள். இந்நிலையில் நேற்று தொண்டி புதுக்குடி அருகே மிதவை மிதந்து கொண்டிருந்தது. அதை அப்பகுதி மீனவர்கள் பார்த்துள்ளனர். உருளை வடிவில் உள்ள அந்த மிதவையை மீட்டு கரைக்கு கொண்டு வந்தோம். இந்த மிதவையை மிதக்க விட்டவர்கள் யார், வேறு பகுதியில் மிதக்க விட்ட மிதவை இப்பகுதிக்கு வந்துள்ளதா என விசாரிக்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ