உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கோலாகலமாக நடந்த ஆராட்டு விழா மண்டல பூஜை நிறைவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

 ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கோலாகலமாக நடந்த ஆராட்டு விழா மண்டல பூஜை நிறைவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் நடப்பதை போன்று இங்கு கோலாகலமாக விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று மண்டல பூஜை நிறைவில் நடந்த ஆராட்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரத்தில் இருந்து 16 கி.மீ.,ல் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் உள்ளது. டிச.,18ல் தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கொடி மரத்தில் தலைமை குருசாமி மோகன் தலைமையில் சரணகோஷம் முழங்க கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை கணபதி ஹோமம், பிறகு மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் வில் மற்றும் அம்புடன் வல்லபை ஐயப்பன் வீதியில் உலா வந்து பள்ளி வேட்டை நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கோயில் பிரார்த்தனை மண்டபத்தில் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 8:00 மணிக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் முத்துநாச்சி அம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்கே உடலில் பல வண்ணப் பொடிகளை பூசியவாறு செண்டை மேளம் முழங்க நாட்டியக் குதிரைகள் நடனமாட, ஐயப்ப பக்தர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்தனர். காலை 9:45 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள பஸ்மக்குளத்தில் தாம்பூலத்தில் உற்ஸவருக்கு பால், மஞ்சள் பொடி உள்ளிட்ட 5 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. புனித நீராடி பின்னர் ஊர்வலமாக பல்லக்கில் உற்ஸவமூர்த்தியை கொண்டு வந்தனர். காலை 10:30 மணிக்கு கொடி மரத்தில் கொடிப் பட்டம் இறக்கப்பட்டது. மூலவர் வல்லபை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜன.,1ல் புத்தாண்டு அன்று இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை புறப்படு கிறது. விழாவில் முன்னாள் வார்டு உறுப்பினர் முனியசேகரன், டாக்டர் முனியசாமி, இன்ஜீனியர் முகனேஸ்வரன், வக்கீல் ரவிச்சந்திரன், பிரபாகர், மிதுர்ளா, ஆர்த்தோ கேர் டாக்டர் பிரசாந்த், கிருத்திக் ஐயன் வல்லபை விசாகன், விஜயகுமார், ராகுல், முத்துக்குமார் அண்டு பிரதர்ஸ் உரிமையாளர்கள், ராமநாதபுரம் ஸ்ரீ வல்லபை நண்பர்கள், மதினா டிரேடர்ஸ் உரிமையாளர்கள், ரெகுநாதபுரம் செந்தில்குமார், நயினாமரைக்கான் மருங்கன், ஆர்.எஸ்.ஆர். பில்டர்ஸ் காளிதாஸ். சத்திரக்குடி ஆனந்த், ரெகுநாதபுரம் இளங்கோவன், சங்கரசுதன், கனீஷ் பாலன், ஓட்டல் ராம் சாய் உரிமையாளர்கள், அழகன்குளம் காளிதாஸ், தெற்கு காட்டூர் கோவிந்தசாமி, கந்தசாமி, பேராவூர் வீணை விண்டோஸ், ஐஸ்வர்யம் மெட்டல்ஸ், சாய் பிரிண்டர்ஸ், கடையன்வலசை ரூபக் நந்தபாலன். பட்டணம்காத்தான் பிரவீன் மென்ஸ் பியூட்டி பார்லர் உரிமையாளர்கள், ராமநாதபுரம் அரண்மனை திருச்செல்வம், ரதீஷ் அஸ்வா, அக்க்ஷயா நம்ருதா, பாண்டியன், குமார் கம்ப்யூட்டர் பிரஸ் உரிமையாளர்கள், வண்ணாங்குண்டு ஐயப்ப பக்தர்கள் குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை