மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்து
12-Jun-2025
சாயல்குடி : -சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிராமத்தில் ராமையா நாடார் குடியிருப்பில் தனது தாய், தந்தையின் நினைவாக, அவர்களது வாரிசுகள், குடும்பத்தினர் சார்பில் கே.ஆர்.கார்டன் வளாகத்தில் கட்டியுள்ள மணிமண்டபம் திறப்பு விழா நேற்று நடந்தது.சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் கா.ராஜமுத்து. இவரது மனைவி முன்னாள் ஆசிரியை சமுந்திரவள்ளி. ராஜமுத்து ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டையில் உள்ள முகமதியா மேல்நிலைப் பள்ளியில் 28 ஆண்டுகள் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் உருவாக்கிய மாணவர்கள் தடகளம், வாலிபால், கபடி உள்ளிட்ட குழு விளையாட்டுகளில் மாவட்ட, மாநில அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.சமுந்திரவள்ளி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 2020ல் உடற்கல்வி ஆசிரியர் ராஜமுத்துவும், 2021ல் ஆசிரியை சமுந்திரவல்லியும் காலமானார்கள்.இந்நிலையில் தங்களை வளர்த்தெடுத்த பெற்றோரின் நினைவாக அவர்களது வாரிசுகள், குடும்பத்தினர் சார்பில் கன்னிராஜபுரம் ராமையா நாடார் குடியிருப்பில் முற்றிலும் குளிருட்டப்பட்ட மணிமண்டபம் கட்டப்பட்டது. அங்கு மையப் பகுதியில் தத்ரூபமாக தாய், தந்தையரின் முழு உருவச்சிலை வடிவமைத்து வைத்துள்ளனர். இளம் வயது முதல் முதுமை காலம் வரை உடற்கல்வி ஆசிரியர் ராஜமுத்து பயன்படுத்திய அன்றாட அத்தியாவசிய பொருட்கள், உடைகள், புத்தகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுவர்களில் அவர் சொன்ன பொன்மொழி வசனங்கள் எழுதியுள்ளனர்.முற்றிலும் குளிருட்டப்பட்ட மணிமண்டபத்தில் நேற்று காலை முதல் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மாலை அணிவித்து தொடர்ந்து மரியாதை செலுத்தினர். உடற்கல்வி ஆசிரியர் ராஜமுத்து அறக்கட்டளை சார்பில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, சென்னை ஆர்த்தி ஸ்கேன் லேப்ஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி நடந்தது. சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராஜமுத்து அறக்கட்டளையினர் செய்தனர்.
12-Jun-2025