பள்ளிகளில் ஆதார் பதிவு
திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு பணிகள் நடந்து வருகிறது என மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரன்ஸ் ஆரோக்கியராஜ் தெரிவித்தார். அவர் கூறியதாவது:பள்ளி மாணவர்கள் அரசின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி சேவைகளை பெறவும் தற்போது ஆதார் எண் அத்தியாவசிய தேவையாக உள்ளது. ஆதார் இல்லாத மாணவர்கள் உதவித் தொகை வந்தவுடன் அவசரம், அவசரமாக ஆதார் கோரி விண்ணப்பிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வகையில் ஆதார் மையங்களை அமைத்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது.ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள்மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இப்பணிகள் நடக்கிறது.