உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில்லா தீபாவளி: விழிப்புணர்வு பிரசாரம்

விபத்தில்லா தீபாவளி: விழிப்புணர்வு பிரசாரம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நிலைய அலுவலர் கருப்பையா பட்டாசுகள் வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொது மக்களிடம் விளக்கினார். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும், வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என்றும், வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை