உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரம் : அதிகமான ரயில்களை இங்கிருந்து இயக்க வேண்டும்

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரம் : அதிகமான ரயில்களை இங்கிருந்து இயக்க வேண்டும்

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பாதையில் ராமநாதபுரம் அமைந்துள்ளது ராமநாதபுரம். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து எந்த ரயில்களும் இயக்கப்படவில்லை. அனைத்து ரயில்களும் ராமேஸ்வரத்தை மையமாக வைத்து இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு காலை 6:45, 7:25, மதியம் 12:03, இரவு 7:03 நேரங்களில் முன் பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் இரவு 9:55 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. ஓகா வாராந்திர ரயில் வெள்ளிக்கிழமைகளில் காலை 11:25 மணிக்கு இயக்கப்படுகிறது. தற்போது ராமேஸ்வரம் ரயில் நிலைய விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. பாம்பன் புதிய பாலம் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது.புவனேஸ்வர் ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. செகந்திராபாத் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9:50 மணிக்கு இயக்கப்படுகிறது. ஞாயிறு, வியாழன், வெள்ளி தினங்களில் திருப்பதிக்கு மாலை 5:18க்கு புறப்படுகிறது. போர்ட் மெயில் விரைவு வண்டி சென்னைக்கு தினமும் மாலை 6:28 மணிக்கு இயக்கப்படுகிறது. தினசரி இரவு 9:25க்கும் சென்னைக்கு இயக்கப்படுகிறது. மேலும் புதிய ரயில் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. கோவைக்கு புதன்கிழமை இரவு 8:13 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இத்தனை ரயில்கள் இருந்தும் ராமநாதபுரத்தில் இருந்து எந்த ரயிலும் இயக்கப்படவில்லை. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தற்போது மூன்று பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் ஒன்று மெயின் லைனாகவும், மற்றொன்று மாற்றுப்பாதைக்காகவும், மற்றொன்று சரக்கு ஏற்றி இறக்க மட்டும் உள்ளன.ரயில்கள் நிறுத்தம் செய்வதற்கு கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கப்படவில்லை. ரயில்கள் பராமரிப்பு பணிக்கான ரயில்வே பிட்லைன்களும் இல்லாத நிலையில் நெருக்கடியில் ராமநாதபுரம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு ரயில்களை நிறுத்தி எடுப்பதற்காக கூடுதல் பிளாட்பாரங்கள், பிட் லைன்கள் அமைத்து ராமநாதபுரத்தை தெற்கு ரயில்வேயில் முக்கியமான முனையமாக மாற்ற ரயில்வே நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Seyed Omer
ஜூன் 07, 2025 19:19

முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கன்னியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் .மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கன்னியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும். மேலும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும் . திருசெந்தூரிலிருந்து சென்னைக்கு ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே உள்ளது எனவே மேலும் விழுப்புரம் திருச்சி மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ஒரு ரயில் சேவை இயக்கப்பட வேண்டும்.


O.Ebrahim Ali Ahamed
ஜூன் 07, 2025 18:21

இந்த வழித்தடத்தில் உள்ள மானாமதுரை ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாகும் இந்த ரயில் நிலையத்தில், எந்தெந்த ரயில் பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கின்றன என்கிற அறிவிப்பு பலகை இல்லை


சமீபத்திய செய்தி