உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெகுநாதபுரத்தில் நேற்று மாலையில் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் தேவை

ரெகுநாதபுரத்தில் நேற்று மாலையில் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் தேவை

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பெரியபட்டினம் --ராமநாதபுரம் பிரதான சாலையில் நேற்று மாலை நான்கு வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டனர். ரெகுநாதபுரம் பிரதான சாலையில் அரசுப் பள்ளி, வங்கி மற்றும் வணிக வளாகங்கள், கோயில் ஏராளமான கடைகள் உள்ளிட்டவைகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை 4:00 முதல் 4:30 மணி வரை ரெகுநாத புரம் பகுதியைச் சேர்ந்த 27 முதல் 30 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கத்தி, அரிவாள், இரும்பு தடி உள்ளிட்டவைகளை கையில் வைத்துக் கொண்டு அப்பகுதியில் ரவுடியிசம் செய்தனர். இவர்களின் நடவடிக்கை கண்டு அப்பகுதியில் இருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெறித்து ஓடினர். அச் சமயத்தில் ரெகுநாதபுரம் புறக்காவல் நிலையத்தில் ஒரு போலீஸ்காரர் மட்டுமே இருந்தார். அவருக்கு தகவல் சொன்னவுடன் அவர் பொதுமக் களுடன் இணைந்து நான்கு பேரில் ஒருவரை பிடித்து புறக்காவல் நிலையத்தில் அடைத்து வைத்தார். இந்நிலையில் மூன்று பேரும் சேர்ந்து அந்த நபரை விடுங்கள் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மீட்டு சென்றனர். இச் சம்பவங்கள் யாவும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தன்னார்வலர்கள் கூறுகையில், தற்போது திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ் பெக்டர் ஸ்டேஷனாக கடந்த இரண்டு மாதங் களுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே ரெகுநாதபுரம் புறக்காவல் நிலையத்தில் எஸ்.ஐ., தலைமையில் தரம் உயர்த்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் ஆக போலீசாரை நியமிக்க வேண்டும். இதனால் இப்பகுதியில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ