மேலும் செய்திகள்
கீழக்கரையில் தொடர் மின்தடை
08-Jul-2025
கீழக்கரை; கீழக்கரை மின் வாரியத்தில் போதிய வயர்மேன்கள் இன்றி மின் கம்பங்களை பராமரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளதால் கூடுதலாக வயர்மேன்களை நியமிக்க வேண்டும். கீழக்கரை மின்வாரிய அலுவலகம் 17 மண்டலங் களாக பிரிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. இதில் அனைத்து மண்டலங்களிலும் 21 ஆயிரத்து 750க்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்பு களுக்காக 3500க்கும் அதிகமான மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் மின்கம்பங்களை பராமரிக்க மின்வாரிய அலுவலகத்தில் நிரந்தர வயர்மேன்கள் ஒருவர் கூட பணியில் இல்லை. கீழக்கரையைச் சேர்ந்த மக்கள் நல பாதுகாப்புக் கழகச் செயலாளர் முகைதீன் இப்ராகிம் கூறியதாவது: மின்கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் மின் நுகர்வோர்கள் பாதிக்கின்றனர். இப்பகுதியில் ஒப்பந்த மின் பணியாளர்களாக பணி செய்து வரும் ஒப்பந்த வயர்மேன்களை முறையாகவும், கூடுதலாக பணியமர்த்தி பொது மக்கள் சேவையை தொடர வேண்டும். இது குறித்து கலெக்டருக்கும் மின் வாரிய உயர் அதிகாரி களுக்கும் மனு அனுப்பி உள்ளேன் என்றார்.
08-Jul-2025