உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அ.தி.மு.க., துவக்க நாள் விழா கொடியேற்றம்

அ.தி.மு.க., துவக்க நாள் விழா கொடியேற்றம்

கீழக்கரை: கீழக்கரை நகரில் அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்க நாள் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் குமரவேல், எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞர் அணி துணை செயலாளர் சுரேஷ்.நகர் அவைத்தலைவர் சரவண பாலாஜி, ஹரி நாராயணன், நகர் பொருளாளர் ஜி.கே.வேலன், துணைச் செயலாளர் குமரன், இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை தலைவர் செல்வகணேச பிரபு, ஐ.டி.விங்., பிரிவு பிரதீப், சிவா, நவாப் கான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ