உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அதிக மகசூல், வருமானம் ஈட்ட சான்று  பெற்ற விதைகள் தேவை வேளாண் துறை யோசனை

அதிக மகசூல், வருமானம் ஈட்ட சான்று  பெற்ற விதைகள் தேவை வேளாண் துறை யோசனை

ராமநாதபுரம்: விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தினால் அதிக மகசூல் பெறுவதோடு, விதைகளை உற்பத்தி செய்து அதிக வருமானம் ஈட்டலாம் என ராமநாதபுரம் விதைச்சான்றளிப்பு, உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் விதைச்சான்றளிப்பு, உயிர்மச் சான்றளிப்புத் துறையால் அரசு உற்பத்தியாளர்களால் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் 2583.57 எக்டேரில் விதைப்பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு 2857.14 டன் விதைகள் சான்றளிப்பு செய்யப்பட்டு ஆதார நிலை, சான்று நிலை விதைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் 2024--25ம் ஆண்டில் 3 ஆண்டுகள் உயிர்ம விவசாயம் செய்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது. உயிர்ம சான்று விண்ணப்பிக்கும் குழுக்களுக்கு பாராம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இலவசமாக பதிவு செய்யப்படுகிறது. எனவே புதிய விதைப்பண்ணை மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எதிரில் உள்ள உழவர் மையம் முதல் தளத்தில் இயங்கும் விதை, உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ