உள்ளூர் செய்திகள்

கால்நடை முகாம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மருதகம் கிராமத்தில் கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடந்தது. உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கால்நடை டாக்டர்கள் திருச்செல்வி, கவுசிக் முன்னிலை வகித்தனர். கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல், குடற்புழு நீக்கம் உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்து தடுப்பூசி செலுத்தினர். முகாமில் 50 பேரின் 663 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கால்நடை வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர். உடன் ஆய்வாளர்கள் பிரபாகரன், வீரகேசரி, உதவியாளர்கள் சுனைதாபானு, சேதுராஜா உட்பட பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை