உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி தலைமையாசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருது 

பள்ளி தலைமையாசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருது 

ராமநாதபுரம்; 2023-25ம் ஆண்டிற்கான சிறந்த தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற முதுகுளத்துார் தாலுகா உலையூர் அரசு உயர்நிலை பள்ளி தலைமை யாசிரியர் அம்பேத்கார் தேர்வாகியுள்ளார்.பள்ளி கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான சிறந்த தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு மாநில தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள நுாறு பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.இவ்விருது பெற ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகா உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கொ. அம்பேத்கார் தேர்வாகியுள்ளார். திருச்சியில் உள்ள தேசிய கல்லுாரி வளாகத்தில் ஜூலை 6 ல் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.அப்போது உலையூர் பள்ளிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் தலைமையாசிரியருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி