உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அண்ணாதுரை பிறந்தநாள்

அண்ணாதுரை பிறந்தநாள்

பரமக்குடி: பரமக்குடி எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு தி.மு.க., நகர் தெற்கு இளைஞர் அணி சார்பில் அண்ணாதுரை 117வது பிறந்த நாள் விழா நடந்தது. நகராட்சி தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். ஜோசப் குழந்தை ராஜா வரவேற்றார். அண்ணாதுரை படத்திற்கு நகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, நகர் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். *தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில் தி.மு.க., கிளைச் செயலாளர் ஜஹாங்கீர் அலி, ஒன்றிய துணை அமைப்பாளர் பவுசியா பானு உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பாலைக்குடியில் ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய அவைத் தலைவர் உமர் பாரூக், வழக்கறிஞர் சபரிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி